கடந்த அரசாங்கம் நாட்டுக்கு தேவையான அபிருத்திகளை செய்யவில்லை

நாட்டில் யுத்தம் ஏற்பட்டபோது அதற்கு கூடுதலான நிதி செலவு செய்யப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்போதைய அரசாங்கம் நாட்டுக்கு தேவையான எவ்விதமான அபிவிருத்திப்பணிகளையும் செய்யவில்லைஎனபிரதமர் ரணில்விக்கிரமசிங்கதெரிவித்தார்.

இன்று (17)காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கசப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தைஇரத்தினபுரி பட்டுஹேன மலங்கமபகுதியில்வைபவரீதியாக திறந்துவைத்தபின்னர் அங்கு நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே இதனைத்தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்தின,  தலதாஅத்துக்கோரள உள்ளிட்டபெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது;

முன்னாள் ஜனாதிபதி  ஜே. ஆர். ஜயவர்தனவினால் ஆரம்பிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்ககுமாரதுங்க தரமுயரத்தினார்.அப்பல்கலைக்கழகத்தில் தற்போது மருத்துவபீடமொன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாட்டில் யுத்தம் ஏற்பட்டபோது அதற்கு கூடுதலான நிதி செலவு செய்யப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்போதைய அரசாங்கம் நாட்டுக்கு தேவையான எவ்விதமான அபிவிருத்திப்பணிகளையும் செய்யவில்லை. கடந்தகாலத்தில் தென்பகுதியில் அமைக்கப்பட்ட துறைமுகங்கங்கள், விமானநிலையங்கள் தற்போது பெறுமதி வாய்ந்ததாக உருப்பெறுகின்றன. இவை  அமைக்கப்பட்டவுடன் பாரிய நிதிப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கப்பட்டன. தற்போது இவை இலாபம் பெறும் நிறுவனங்களாக மாறுகின்றன. எமது அரசாங்கத்தினால் ஹம்பாந்தோட்டையில் 100தொழிற்சாலைகளை அமைக்கப்பட்டுவருகின்றன.

தற்போது நாம் பல்வேறு அபிவிருத்திபணிகளை செய்துவருகின்றோம். சப்ரகமுவ மருத்துவபீடத்தை தொடர்ந்து பலபட்டதாரிகள் வெளியேறுவார்கள்.இவர்களுக்குதொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் பாரியபொறுப்பும் எம்மிடமுள்ளது.

நாம் மிககுறுகியகாலத்தில் 690 பில்லியன்ரூபாமருத்துவ துறைக்கும் 635பில்லியன் ரூபாகல்விக்காகவும் செலவுசெய்திருக்கிறோம்.மொத்தமாக 1300பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவு செய்யப்படுகின்றன. தற்போது ஆரம்பிக்கப்பட்ட மருத்துவபீடத்திலிருந்து வெளியேறும் மாணவர்கள் நாட்டுக்காக உழைக்கவேண்டும்.

கடந்தகாலங்களில் அபிவிருத்திகள் நகரங்களுக்கும் கொழும்புக்கும் மட்டுமேமட்டுப்படுத்தப்பட்டு இருந்தன.தற்போதுகிராமங்களுக்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஓரங்கமாககிராம மக்களை மேம்படுத்தும் முகமாக கம்பெரலிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.கடந்தகாலங்களில் சிட்டை மூலம் பாடசாலைகளுக்கு அதிபாகள்நியமிக்கப்பட்டனர். தற்போது பரீட்சை அடிப்படையிலேயே பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம் மேற்கொள்ளபடுகின்றன.

கடந்தஅரசாங்கம் முன்னுரிமையில்லாத பெறுமதியில்லாத அபிவிருத்திகளே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எமதுஅரசாங்கம் மக்களுக்குதேவையானஅவசியமானஅபிவிருத்திகளையேமேற்கொள்கின்றன. எனினும் இதற்கான பிரசாரங்கள் கிடைக்கப்பெறாதது துரதிஷ்டமானது. எது எப்படியோ சிறந்தகல்வியை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் அதனைநாட்டின் அபிவிருத்திற்கும் நாட்டுமக்களின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தவேண்டும் என்றார்.

(இரத்தினபுரி தினகரன் நிருபர்)

Thu, 01/17/2019 - 16:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை