கிராமத்து பாடசாலைகளிலிருந்து அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட வேண்டும்

பாடசாலை கல்வியை அபிவிருத்தி செய்யும் பொழுது கிராமத்திலுள்ள பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமைய வழங்க வேண்டுமென துறைமுகங்கள்,  கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

மாத்தறை, தெனியாயதொகுதியிலுள்ளமுகுறுமுல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் அண்மையில் நடைப்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்,   ஆசிரியர்கள்,   பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,  

கிராமத்து பாடசாலைகளின் அபிவிருத்தியின் மூலம் மாணவர்களும், பெற்றோரும் நன்மையடைவதுடன் அதன் மூலமாக பிரபல்யமான பாடசாலைகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்பதற்கு பெற்றோர் எதிர்கொள்ள நேரிடுகின்ற அழுத்தத்திலிருந்தும் விடுபடலாம். அண்மையிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றும் தேசிய செயற்றிட்டத்திற்கு எம்மாலான உதவிகளை மேற்கொண்டு,   அச்செயற்றிட்டத்தில்அனைவரும் பங்குகொள்ள வேண்டும்.

என்னுடைய தகப்பன் தன் ஆரம்ப கல்வியை கிராமத்திலுள்ள சிறு பாடசாலையொன்றிலே ஆரம்பித்தார். பல ஆண்டுகள் அங்கு தான் அவருடைய கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தார். எனவே இவ்வாறான சிறு பாடசாலைகளை அபிவிருத்தி செய்தால் மாத்திரமே எம்மால் இந்நாட்டு கல்வி துறையை அபிவிருத்திச செய்ய இயலும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் அருகிலுள்ள பாடசாலைகளிலேயே பிள்ளைகள் சேர்க்கப்படுகின்றார்கள். அங்கே பெரிய பாடசாலைகள், சிறிய பாடசாலைகளென பாகுபாடு இல்லை. இவ்வாறானதோர் நிலையே முன்பு இந்நாட்டில் காணப்பட்டது. பிற்காலத்தில் புகழ்பெற்ற பாடசாலைகள் எனும் நாடகம் சமூகத்தில் அரங்கேறத் தொடங்கியது. சிறு பாடசாலைகளை அபிவிருத்தி செய்தால் மாத்திரமே கல்வி துறையை அபிவிருத்தி செய்தோமென எம்மால் கூறமுடியும்.

இக்கிராமத்திலுள்ள பாதையை சீரமைக்கும் பொருட்டு நாம் ஏற்கனவே நிதியை ஒதுக்கினோம். பாதையின் நிர்மாணப் பணிகள் கடந்த ஆண்டு ஆரமப்பிக்கப்படவிருந்தது. அதன் பொருட்டு கேள்வி அறிவித்தலொன்றையும் விடுத்திருந்தோம். இந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை காரணமாக இவ்வனைத்து செயற்பாடுகளும் முடங்கின. இவ்வீதி மாத்திரமன்றி 88கி.மீ காப்பட் வீதிகளின் நிர்மாணப்பணிகள் இவ் தெனியாய தொகுதியில் உள்ள மக்களுக்கு கிடைக்காமல் தடைப்பட்டுள்ளது. இப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் பொருட்டு ரூபாய் 10 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி இப்பாடசாலைக்கு மாத்திரமல்ல தெனியாய தொகுதியிலுள்ள அனைத்து பாடசாலைகளின் விளையாட்டு மைதானம் அல்லது கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு இந்நிதியை ஒதுக்கியுள்ளேன்.

2019 ஆண்டு 19 மாணவர்கள் புதிதாக இப்பாடசாலையில் இணைந்துள்ளார்கள். இதனை மாபெரும் வெற்றியாக இப்பாடசாலை அதிபர்,  ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஊர் கருதவேண்டும். இவ்வாறான சிறு கிராமத்து பாடசாலைகள் அபிவிருத்திச் செய்யப்பட வேண்டும்.அப்போதுதான் கிராமத்திலுள்ள பிள்ளைக்கும் தரமான கல்வியை பெற்றுக்கொள்ள இயலும். அக்குறிக்கோளை, கொள்கையை மேலும் வலுவாக்கி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார். 

Tue, 01/29/2019 - 12:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை