நேபாள மாதவிடாய் குடிசையில் தாய், குழந்தைகள் உயிரிழப்பு

நேபாளத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படும் கூரையற்ற குடிசை ஒன்றில் புகையால் மூச்சுத் திணறி தாய் ஒருவரும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தின் பெரும்பான்மையான சமூகத்தினர் மாதவிடாயை அசுத்தம் என கருதி மாதத்திற்கு ஒருமுறை பெண்களை தமது வீடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். இது அந்நாட்டில் சட்டவிரோதமானதாகும்.

எனினும் மேற்கு பஜுரா மாவட்டத்தில் 35 வயதான அம்பா பொஹாரா மற்றும் அவரது இரண்டு மற்றும் 12 வயது மகன்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கூடாரம் ஒன்றில் உறங்கியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேபாளத்தில் உறையும் குளிர்காலம் நீடிப்பதால் சூடேற்றுவதற்காக இவர்கள் தம்மை சுற்றி தீமூட்டிக் கொண்டுள்ளனர். எனினும் அடுத்த நாள் அந்தப் பெண்ணின் சித்தி கூடாரத்தை திறந்து பார்த்தபோது மூவரும் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

“உயிரிழப்பதற்கான காரணத்தை உறுதி செய்வதற்கு நாம் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை காத்திருக்கிறோம். என்றாலும் இவர்கள் முச்சுத்திணறலால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது” என்று உள்ளூர் பொலிஸ் அதிகாரி உத்தாப் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 01/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை