'வேறு வழியை நாடுவது’ குறித்து வட கொரிய தலைவர் எச்சரிக்கை

அமெரிக்காவின் பொருளாதார தடை தொடர்ந்தால், எங்களது இறையாண்மையை காக்க வேறு வழிகளை நாட வேண்டியிருக்கும் என வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

அவர் வெளியிட்ட புத்தாண்டுச் செய்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு தனது புத்தாண்டு உரையில், தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு புதிய சர்வதேச இராஜதந்திர வழியில் செல்வதாக குறிப்பிட்டிருந்தார்.   

சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்புடன் நடைபெற்ற ஆக்ககரமான உச்சநிலைச் சந்திப்பை மேற்கோள் காட்டி, வட கொரியத் தலைவர் இந்தக் கருத்துகளை முன்வைத்தார்.   

எனினும் சிங்கப்பூர் சந்திப்புக் பின்னர் இரு தரப்பிடம் இருந்தும் பெரிதாக முன்னேற்றங்கள் ஏற்பாடத நிலையில் எதிர்பார்ப்புகளும் குறைவடைத்துள்ளன.   

“உலக நாடுகள் முன்னர் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றா விட்டால், எங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை மற்றும் அழுத்தங்களை அகற்றாவிட்டால், எங்களது இறையாண்மை மற்றும் நலனை பாதுகாக்க வேறு வழிகளை நாட வேண்டியதை தவிர வேறு வழியில்லை.  

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன். அப்போது சர்வதேச சமூகம் வரவேற்கும் முடிவு எடுக்கப்படும். தென் கொரியா, அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் இராணுவ பயிற்சியை ரத்து செய்ய வேண்டும்” என்றும் கிம் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.   

வட கொரிய தலைவருடனான இரண்டாவது உச்சிமாநாடு ஒன்று வரும் பெப்ரவரி ஆரம்பத்தில் நடைபெறும் என்று டிரம்ப் குறிப்பிட்டபோதும் அவ்வாறான சந்திப்புக்கான முன்னெடுப்புகள் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.   

Wed, 01/02/2019 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை