பெறா மகள் கொலை; தாய் உடந்தை

AMF
பெறா மகள் கொலை; தாய் உடந்தை-Hali-Ela-Child-Murder-Mother-and-Step-Father-Arrested-5

- ஒன்பது வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
- கழுத்து நெரித்துப் படுகொலை; தாயார் வாக்குமூலம்
- தோட்டத்தில் புதைத்து அதில் பயிர்ச் செய்கை செய்த கொடூரம்

பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் சடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று (09) தோண்டி எடுக்கப்பட்டது.

பெறா மகள் கொலை; தாய் உடந்தை-Hali-Ela-Child-Murder-Mother-and-Step-Father-Arrested-5

பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாஸ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் ஹாலிஎல பொலிஸார் மற்றும் பொது மக்கள் உதவி கொண்டு மாலை 4.30மணியளவில் சிறுமி டிலானியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.

இரசாயண பகுப்பாய்வுக்காக சிறுமியின் சடலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னாள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் 06.01.2019 அன்று கைது செய்யப்பட்டனர்.

பெறா மகள் கொலை; தாய் உடந்தை-Hali-Ela-Child-Murder-Mother-and-Step-Father-Arrested-5

கைது செய்யப்பட்டவர்களான மகேந்திரன் (வயது 30), ஜனாகி (வயது 26) என தெரிவிக்கபட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனை பிரிந்து இன்னுமொருவருடன் ஹாலிஎல பகுதியில் வசித்து வந்துள்ளார்.

எனினும் இருவரும் சட்ட ரீதியாக திருமணம் முடிக்காதவர்கள் எனவும், அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பெறா மகள் கொலை; தாய் உடந்தை-Hali-Ela-Child-Murder-Mother-and-Step-Father-Arrested-5

சிறுமி காணாமல் இருப்பதை கண்டறிந்த குறித்த சிறுமியின் தாயின் சகோதரி பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 13ம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பெறா மகள் கொலை; தாய் உடந்தை-Hali-Ela-Child-Murder-Mother-and-Step-Father-Arrested-5

இதேவேளை தனது மகள் அவர்மறுமணம் முடித்த கணவரினாலேயே பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரென்று பொலிஸ் விசாரணையில் டிலானியின் தாய் தெரிவித்திருக்கிறார்.

அவர் வழங்கியுள்ள வாக்குமூலம் விபரம் வருமாறு; 

எனது ஒன்றுவிட்ட இரத்த உறவுடனான ஒருவரின் மூலமாக எனது மகளை பிரசவித்தேன்.

காலப்போக்கில்மகளை எனது சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு மத்திய கிழக்கு நாடொன்றிற்கு தொழிலுக்கு சென்று விட்டேன். அங்கிருந்து திரும்பியதும்எனது மகளை எனது பொறுப்பில் எடுத்தேன்.  நான் செட்டிக் குளத்திலிருந்து மாத்தன்னை தோட்டத்திற்கு வந்ததும் மகேந்திரன் என்பவரை மறுமணம் செய்து எனது மகளுடன் தோட்டத்திலேயே வாழ்ந்து வந்தேன்.  

பெறா மகள் கொலை; தாய் உடந்தை-Hali-Ela-Child-Murder-Mother-and-Step-Father-Arrested-5

நான் மறுமணம் செய்தவருக்கு மேலும் இரு குழந்தைகளை நான் பிரசவித்தேன். எனது கணவர்மகள்டிலானியைமிகவும் துன்புறுத்தி வந்தார். என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 5ந் திகதி நான் வெளியில் போய் வீடு வந்த போது எனது கணவரும் வீட்டில் இருந்தார். 

எனது மகள் டிலானி சமையலறையில் கீழே விழுந்து கிடந்தார். அது பற்றி கணவரிடம் வினவிய போது கழுத்தை நெறித்து கொன்றுவிட்டேன் என்று கூறினார். எனது கணவர் எனது மகள் டிலானியை அடிக்கடி தொந்தரவு செய்ததுடன் பாலியல் வல்லுறவையும் மேற்கொண்டிருந்தார். 

எனது மகள் இறந்தமை குறித்து எவருக்கும் கூற வேண்டாம். யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவோம். வெளியே தெரிந்தால் எல்லோரும் சிறைக்கு போக வேண்டி ஏற்படுமென்று எனது கணவரும் கணவரின் தாயாரும் கூறினர். இதற்கு நான் இணங்கி வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்து அதன் மேல் மரக்கறி பயிர்ச் செய்கையை மேற்கொண்டேன்.  

பெறா மகள் கொலை; தாய் உடந்தை-Hali-Ela-Child-Murder-Mother-and-Step-Father-Arrested-5

சிறுமியை கேட்டவர்கள் எல்லோரிடமும் ஹொஸ்டலில் வைத்து படிப்பிக்கின்றோம் என்று கூறினேன்.ஆனால் எனது கணவர் டிலானி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

எனது உறவுக்காரர்களிடம் உண்மை நிலையினை நான் எடுத்துக் கூறினேன்.  டிலானியை பார்க்க வந்த எனது சகோதரிக்கு இது விடயம் தெரியவரவே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்றார்.   

(பதுளை தினகரன் விசேட நிருபர் - செல்வராஜா, ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

Thu, 01/10/2019 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை