பத்திரிகை சுதந்திர சுட்டியில் இலங்கை முன்னேற்றம்

உலக பத்திரிகை சுதந்திர நிறுவனம்(world press freedom) வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய,ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 10 இடங்கள் முன்னேறியுள்ளது. 2017ஆம் ஆண்டில் 141வது இடத்தில் இருந்த இலங்கை 2018ம் ஆண்டில் 131வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக பத்திரிகை சுதந்திர நிறுவனம் அறிவித்துள்ளது.  

இந்த சுட்டியின்படி, உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வே ஆகும். ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாக உள்ள நாடு எரித்திரியா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தெற்காசியாவில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கும் அதேவேளை, மாலைதீவு, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இலங்கையையும் விட மேலிடத்தில் உள்ளன.  

இந்த சுட்டியில் 94வது இடத்தில் உள்ள பூட்டான் தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்தை கூடுதலாகப் பேணும் நாடாக அமைந்துள்ளது.   

Thu, 01/03/2019 - 11:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை