இன்றிலிருந்து ஒரு சில தினங்களுக்கு மழை

RSM
இன்றிலிருந்து ஒரு சில தினங்களுக்கு மழை-Weather Forecast-Rain

இன்றிலிருந்து கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழையுடன் கூடிய வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று (11) முதல் நாளை மறுதினம் (13) வரை, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வவ்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.   

Fri, 01/11/2019 - 13:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை