சிறுபான்மையினர் ஏற்கும் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்

கோட்டாபய,பசில்,சமல் ஆகியோர் தாம் ஜனாதிபதி தேர்தலில் குதிக்கவுள்ளதாக கூறினாலும் இதுவரைக்கும் வேட்பாளரை தெரிவுசெய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.

இதன் மூலம் அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டிருப்பது தெளிவாவதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.   கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரி ய பீடாதிபதிகளை சந்தித்த மேல்மாகாண ஆளுநர் அஸாத்சாலி, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது:

 ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். அதனால் சிறுபான்மையினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே மிகவும் உகந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

 மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த வேறு எவருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என குமார வெல்கம கூறியிருக்கிறார்.  

புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடந்தவுடன் இடம்பெற வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சியொன்று இல்லாத நிலையில் பாரிய பிரச்சினை எழாது .  

 சகலரதும் உடன்பாட்டுடன் தான் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். நல்லவற்றை எதிர்ப்பதையே பலரும் பழக்கமாக கொண்டுள்ளனர்.  

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, புதிய யாப்பொன்றை கொண்டுவந்த ​போது ஐ.தே.க அதனை தீயிட்டு கொளுத்தி ஒத்துழைப்பு வழங்க மறுத்தது. மஹிந்த ராஜபக்ஷவும் புதிய யாப்பொன்றை கொண்டுவர முயன்றார் எனவும் அவர் தெரிவித்தார். (பா) 

Mon, 01/21/2019 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை