கைதிகள் மீது கட்டுப்பாடு: பிரேசில் நகரில் வன்முறை

குற்றவியல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக வட கிழக்கு பிரேசில் நகரான போடலிசாவுக்கு சுமார் 300 துருப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.  

கடைகள், வங்கிகள் மற்றும் பஸ்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்காக கராஸ் மாநிலம் எங்கும் படையினர் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வாரம் இடம்பெற்ற பல தாக்குதல் சம்பவங்களை அடுத்து சிறப்புப் படைகளை அங்கு அனுப்ப நீதி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. 

குற்றவியல் கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளுர் சிறைச்சாலைகளில் கடுமையான புதிய நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.  

குற்ற கும்பல்கள் கூட்டுச் சேர்வதை தடுக்கும் வகையில் சிறைக்குள் கைதிகளை பிரித்து வைப்பது மற்றும் தொலைபேசி சமிக்ஞைகளை தடுக்கும் நடவடிக்கையை நிர்வாகம் எடுத்துள்ளது.  

இந்நிலையில் வீதிகளில் வன்முறைகளை ஆரம்பித்திருக்கும் குற்ற கும்பல்கள் எண்ணெய் நிரப்பு நிலைம் ஒன்றின் மீது தீ வைக்கும் காட்சி பிரேசில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளன. இதுபோன்ற சுமார் 50 க்கும் அதிகமாக வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  

பிரேசிலில் 700,000க்கும் அதிகமான கைதிகள் இருப்பதோடு இது அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து உலகின் மூன்றாவது அதிக கைதிகள் உள்ள நாடாகும்.      

Mon, 01/07/2019 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை