நியூ ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

52 வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கல்வி, கலை, விளையாட்டு, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளினூடாக பிரதேச மக்களுக்கு சேவையாற்றி வரும் களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவு முன்னாள் கழக தலைவர் சிவ ஸ்ரீ மு.அங்குசன் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வி.அனுசகுமார் அவர்களின் பங்குபற்றலுடன் வெள்ளிக்கிழமை (18) மாலை களுவாஞ்சிகுடி வடக்கு -1 கிராம சேவகர் பிரிவின் சரஸ்வதி வித்தியாலய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கழகத்தின் புதிய தலைவராக ந.புருஷோத்மன் தெரிவாகியதோடு செயலாளராக யோ.லிபியன் மற்றும் பொருளாளராக ர.பிரசன்னா மற்றும் உப தலைவராக யோ.சதேஷா உப செயலாளராக மு.சேந்தன் ஆகியோர் தெரிவாகியதுடன் கழகத்தின் மெய்வலுனர் அணியின் அமைப்பாளராக ப.கிருஷ்ணபிரபு மற்றும் கிரிக்கெட், எல்லே, கபடி ஆகிய விளையாட்டுகளுக்கான ஆண், பெண் அமைப்பாளர்களும் தலைவர்களும் மற்றும் கழக போசகர்களும் தேர்வு செய்யப்பட்டதுடன் செயற்குழு உறுப்பினர்களாக களுவாஞ்சிகுடி வடக்கு -1 கிராம சேவகர் பிரிவில் நா.கிருஸ்ணப்பிள்ளை, களுவாஞ்சகுடி வடக்கு கிராம சேவகர் பிரிவில் இ.கலைவாணன் தெற்கு கிராம சேவகர் பிரிவில் கை.சுந்தரலிங்கம் ஆகியோர் தெரிவாகியதுடன் தொடர்ந்து கழக யாப்பு அங்கீகரிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் அ.கந்தவேள் மதகுருமார்களான சிவ ஸ்ரீ மு.அங்குசன் குருக்கள், சிவ ஸ்ரீ.நமசிவாயம் குருக்கள், இறைவரி திணைக்கள உதவி பணிப்பாளர் த.சத்தியகுமார், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.சசிகுமார் , பாடசாலை அதிபர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை