உலகின் பெரும் செல்வந்தர் மனைவியிடம் விவாகரத்து

உலகின் மிகப்பெரிய செல்வந்தரான அமேசன் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜெப் பெசோன் 25 ஆண்டு திருமண வாழ்வுக்கு பின் தனது மனைவியை விவாகரத்துச் செய்யவுள்ளார்.

விவாகரத்து அறிவிப்பை இந்தத் தம்பதி கூட்டாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். “நிண்ட காதல் வாழ்வுக்குப் பின் விவாகரத்துப் பெற்று நண்பர்களாக வாழ்வை பகிர்ந்துகொள்ள நாம் தீர்மானித்துள்ளோம்” என்று இருவரும் அறிவித்துள்ளனர்.

வேலைக்கான நேர்முகப்பரீட்சை ஒன்றில் சந்தித்துக் கொண்ட ஜெப் பெசோன் மற்றும் எழுத்தாளரான மக்கென்சி 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர்.

இதற்கு அடுத்த ஆண்டு இணையதள புத்தக விற்பனையாளராக நிறுவப்பட்ட அமேசன் நிறுவனம் உலகின் பெறுமதிமிக்க நிறுவனங்களில் மக்ரோசொப்டை பின்தள்ளி இந்த வாரம் முதலிடத்திற்கு முன்னேறியது.

அதேபோன்று 54 வயது பெசோன் 137 பில்லியன் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸை பின்தள்ளி முதலிடத்தில் உள்ளார்.

பேசோன் மற்றும் மக்கென்சி தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

எனினும் பேசோன் முன்னாள் செய்தி வாசிப்பாளரான லோரன் சான்செஸுடன் காதல் வயப்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Fri, 01/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை