வட கொரிய தலைவர் கிம் மீண்டும் சீனாவுக்கு விஜயம்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பில் முன் அறிவிக்கப்படாத விஜயமாக வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் சீனாவை சென்றடைந்துள்ளார்.

பிங் தனது மனைவி ரீ சோல் ஜுவுடன் ஜனவரி 10 ஆம் திகதி வரை சீனாவில் தங்கி இருப்பார் என்று அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையே இரண்டாவது உச்சிமாநாடு ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த சீன விஜயம் இடம்பெற்றுள்ளது.

பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பாக இரு தலைவர்களும் கடந்த ஜுனில் சந்தித்தனர்.

பாதுகாப்பு வசதிகளுடன் மற்ற சில மூத்த வட கொரிய அதிகாரிகளுடன் கிம்மின் சீன பயணம் அமைந்துள்ளது. அவர் ஒரு வருடத்துக்குள் நான்காவது முறையாக சீனா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவுடன் இராஜதந்திர உறவில் முக்கிய கூட்டாளியாக சீனா உள்ளது. வட கொரியாவுக்கு வர்த்தக உறவிலும் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனாதிபதி ஷி ஜின்பிங் பதவியேற்ற பின் ஆறு வருடங்களாக சந்திக்காமல் இருந்த வட கொரிய தலைவர் கடந்த வருடம் (2018இல்) மட்டும் மூன்று முறை சந்தித்தார்.

கிம் ஜொங் உன் கடந்த வாரம் வெளியிட்ட புத்தாண்டு உறையில் அணுஆயுதக் களைவுக்கான கடப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறியதோடு, அமெரிக்காவின் தடை நீடித்தால் வேறு வழியை நாட வேண்டி ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

டிரம்ப் மற்றும் கிம்முக்கு இடையிலான சந்திப்புக்கு பின்னர் அமெரிக்க மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை