திமிங்கிலங்கள் பார்வையிடல் சுற்றுலா; பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்

நீண்ட காலமாக திமிங்கிலங்கள் பார்வையிடல் சுற்றுலாவியாபாரத்தில் தீர்வின்றி காணப்படுகின்ற பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்து,இத்துறை மூலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யப்படவேண்டுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை போன்று திமிங்கிலங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பிலும் அனைவரும் விசேட கவனம் செலுத்தி செயற்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

திமிங்கிலங்கள் பார்வையிடல் வியாபாரத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி குறித்த காலத்திற்குள் பிரச்சினைகளிற்கு தீர்வினை வழங்கும் நோக்குடன் விசேட கலந்துரையாடலொன்று துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (03) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கருத்துரைத்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,நீண்ட காலமாக திமிங்கிலங்கள் பார்வையிடல் வியாபாரத்தில் தீர்வின்றி காணப்படுகின்ற பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்து,இத்துறை மூலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை போன்று திமிங்கலங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பிலும் அனைவரும் விசேட கவனம் செலுத்தி செயற்பட வேண்டும்.

உல்லாசதுறை அபிவிருத்தி மற்றும் கத்தோலிக்க மத அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் அலுவிஹார,வெலிகம பிரதேச ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாட்டாளரும், மாகாண சபை உறுப்பினருமான கயான் சன்ஜீவ, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி  அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, வணிக கப்பல்துறை செயலகத்தின் அத்தியட்சகர் அஜித்.பி.செனவிரத்ன,துறைமுகங்கள் மற்றும் அரசநிறுவனங்களின் அதிகாரிகள் எனபலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

நாடென்ற வகையில் நாம் உரிய முறையில் சட்டதிட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும். இச்சந்தர்பத்தில் ஏதேனும் குறைபாடுகள் நிகழுமாயின் அதன் மூலமாக நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதே போல் நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய சிக்கல்கள் தோன்றும். அது மாத்திரமன்றி சான்றிதல் வழங்குதலிற்கு அப்பால் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். கடலில் படகுகள் செயல்படும் முறை,திமிங்கிலங்களிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம்செயற்படும் முறை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்.

இவ்வனைத்து நடவடிக்கைகளின் பொருட்டு அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். அவை உரிய நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டும். அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி,குறித்த காலப்பகுதிக்குள் பிரச்சினைகளிற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து வணிக கப்பல்செயலக அலுவலகத்தின் உதவியுடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 2019ம் ஆண்டு தை மாதம் முதல் 05 மாத காலப்பகுதிக்குள் படகு உரிமையாளர்களிற்கு தரச் சான்றிதழ்வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ அமைச்சர் இதன்போது யோசனையொன்றை முன்வைத்தார்.

அதேபோல் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் 2012ம் ஆண்டு திமிங்கிலங்கல் பார்வையிடல் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கல்பிட்டி மற்றும் ஹிக்கடுவ பிரேதசங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதைப் போல் தை மாதம் முதல் மிரிஸ்ஸ பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது. அமைச்சரின் யோசனைக்கமைவாக படகு உரிமையாளர்களிற்கு கடன் சலுகைகள் வழங்குவதற்கும், சட்ட திட்டங்களிற்கு உட்பட்ட வகையில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.

நாளொன்றிற்கு 2000 வரையிலான உல்லாச பயணிகள் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கு வருகைதருவதுடன் உரிய நடைமுறை இன்மையினால் மாதாந்தம் ரூபாய் 45 இலட்சம் வரையில் நட்டம் ஏற்படுவதாகவும் திமிங்கிலங்கள் பார்வையிடல் மற்றும் நீர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் இக் கலந்துரையாடலில்பி.எச்.எட்வின் சில்வா இக் கலந்துரையாடலில்தெரிவித்தார்.                                        

Thu, 01/03/2019 - 17:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை