மசடோனிய பெயர் மாற்றத்தால் கிரேக்கத்தில் பெரும் ஆர்ப்பாட்டம்

மசடோனிய நாட்டின் பெயரை மாற்றுவதற்கு கிரேக்க அரசு உடன்படிக்கை செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொலிஸாருடன் மோதல்கள் வெடித்துள்ளன.

தலைநகரில் கூடிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோக மேற்கொண்டனர்.

கிரேக்கத்தின் வடக்கில் உள்ள அண்டை நாடான மசடோனிய நாட்டின் பெயரை வடக்கு மசடோனிய குடியரசு என மாற்றுவதற்கு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

கிரேக்க பிராந்தியம் ஒன்றின் பெயரும் மசடோனியா என்பதால் இந்த விடயம் இரு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்தங்களாக முறுகலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கிரேக்க இடதுசாரி பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் மற்றும் மசடோனிய பிரதமருக்கு இடையில் இந்த பெயர் மாற்றம் குறித்த உடன்படிக்கை கடந்த ஜூனில் கைச்சாத்தானது.

இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் பெறும் வாக்கெடுப்பு கிரேக்க பாராளுமன்றத்தில் இந்த வாரம் இடம்பெறவுள்ளது.

1991 ஆம் ஆண்டு யுகோஸ்லாவிய குடியரசில் இருந்து மசடோனியா பிரிந்தது தொடக்கம் தனது நாட்டின் பெயர் காரணமாக தொடர்பில் கிரேக்கத்துடன் முறுகலில் ஈடுபட்டு வருகிறது.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை