பிரான்சின் முன்னாள் நட்சத்திர வீரர் உயிருடன் மீட்கப்படுவாரா?

விமானம் மாயமானதில் காணாமல் போன பிரான்சின் முன்னாள் நட்சத்திர வீரர் எமிலியானோ சலாவை உயிருடன் மீட்பது தொடர்பான நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நட்சத்திர வீரரரும், அவர் பயணித்த விமானத்தின் விமானியும் மாயமாகி 40 மணித்தியாலங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில், அவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானம் மாயமாவதற்கு முன்னர் அவர் வெளியிட்டிருந்த குரல் பதிவொன்றிற்கமைய கையகடக்க தொலைபேசி தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கடல் பகுதிகளில் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

பிரான்ஸின் நண்டெஸ் கால்பந்து கழக அணிக்காக இதுவரை விளையாடிவந்த நட்சத்திர வீரர் எமிலியானோ சலாவை வேல்ஸின் கார்டிஃப் சிட்டி கால்பந்து அணி வாங்கியது.

அதற்கமைய சலா சிறிய ரக விமானம் மூலம் பிரான்ஸில் இருந்து கடந்த திங்கட்கிழமை வேல்ஸ் நாட்டிற்கு புறப்பட்டார். அவர் பயணித்த விமானம் சனல் தீவுகளுக்கு மேலே பறந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

இந்நிலையில், காணாமல் போன பிரான்சின் முன்னாள் நட்சத்திர வீரர் எமிலியானோ சலாவின் பாதுகாப்பான மீள்வருகையை வேண்டி சலாவின் இரசிகர்களும், நண்டெஸ் அணியின் ஆதரவாளர்களும் தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை