சிம்பாப்வே ஆர்ப்பாட்டங்களில் பலர் பலி: பல நூறு பேர் கைது

சிம்பாப்வேயில் எரிபொருள் விலையை அரசு இரட்டிப்பாக அதிகரித்ததை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹராரே மற்றும் புலவாயோ நகர வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பல நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டயர்களை தீயிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை முடக்கியுள்ளனர்.

சட்டவிரோத வர்த்தகம் மற்றும் எரிபொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதால் ஏற்படும் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக ஜனாதிபதி எம்மானுவேல் மங்கக்வா குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு சிம்பாப்வே அரசு முயற்சித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து சம்பளம் தேக்கம் கண்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததை உறுதி செய்திருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஒவேன் நிகுபே, அந்த எண்ணிக்கை பற்றி கூறவில்லை. இந்த வன்முறைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் உரிமை குழுக்கள் மீது அவர் குற்றம்சாட்டினார்.

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை