பிலிப்பைன்ஸ் முஸ்லிம் பிராந்தியத்தில் சுயாட்சி அதிகாரத்திற்கு வாக்கெடுப்பு

பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தெற்கு பிராந்தியத்திற்கு கணிசமான சுயாட்சியை வழங்க கொந்தளிப்பான மின்தனாவோ பிராந்தியத்தின் சுமார் மூன்று மில்லியன் மக்கள் நேற்று வாக்களிப்பில் பங்கேற்றனர்.

பங்சமோரோ என்று அறியப்படும் பகுதிக்கு தனியான சுய நிர்வாகாம் ஒன்றை உருவாக்குதற்கு இந்த வாக்கெடுப்பில் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பிரிவினைவாதிகள் மற்றும் பிலிப்பைன்ஸ் இராணுவத்தி ற்கு இடையில் பல தசாப்த மோதலுக்கு தீர்வு காண்பதாக இந்த வாக்கெடுப்பு உள்ளது. கடந்த பல ஆண்டுகள் நீடித்த இந்த வன்முறைகளில் 120,000க்கும் அதிமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு வரும் வெள்ளிக்கிழமை வெளிவரும் என்று எதிர்பார்ப்பதோடு இதில் சுயாட்சிக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

நான்கு தசாப்தங்களாக சுதந்திரத்திற்காக போராடிய மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி மற்றும் அரசுக்கு இடையில் இடம்பெற்ற அமைதி உடன்படிக்கையின் விளைவாகவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த நகர்வு மூலம் மத்திய அரசின் சில அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதோடு, பிராந்தியத்திற்கு தமது வளங்களை கட்டுப்படுத்த அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த புதிய பிராந்தியத்தின் சொந்தமான பாராளுமன்றம் மற்றும் முதல்வருக்காக 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படும்.

கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பிலிப்பைன்ஸில் மின்தனாவோ பிராந்தியத்தில் கணிசமான முஸ்லிம் சனத்தொகை உள்ளது. நாட்டின் மிக வறுமைப்பட்ட பிராந்தியமாக இருக்கும் இங்கு இராணுவம், முஸ்லிம் பிரிவினைவாதிகள் மற்றும் ஏனைய கிளர்ச்சியாளர்களிடையே அண்மைய ஆண்டுகளாக தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்று வந்தன.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை