ரூபா ஒரு கோடி நஷ்டஈடு செலுத்த விமல் வீரவங்சவுக்கு உத்தரவு

Rizwan Segu Mohideen
ரூபா ஒரு கோடி நஷ்டஈடு செலுத்துமாறு விமல் வீரவங்சவுக்கு உத்தரவு-Wimal Order to Pay Rs 1 Million Compensation to Tilvin Silva-JVP

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு ரூபா ஒரு கோடி நஷ்ட ஈடு செலுத்துமாறு, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தினால் இன்றைய தினம் ( 11) இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழுவிற்கும், அரசியல் சபைக்கும், அக்கட்சியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளடங்கிய, ‘நெத்த வெனுவட்ட எத்த’ (உண்மைக்கு பதிலாக) எனும் நூலை வெளியிட்டதன் மூலம் விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , அவர் புலமைச் சொத்து சட்டத்தை மீறியதாக இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர், டில்வின் சில்வாவினால் கொழும்பு வர்த்தக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த புத்தகத்தை அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து உத்தரவொன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று (11) வழங்கப்பட்ட தீர்ப்பில் 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டம் மீறப்பட்டுள்ளது எனவும், முறைப்பாட்டாளர் கோரிய ரூபா 10 கோடி (ரூபா ஒரு மில்லியன்) நஷ்டஈடை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த புத்தகம் தடைசெய்யப்பட்ட புத்தகம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 01/11/2019 - 14:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை