விமல் வீரவன்சவின் இழப்பீட்டுத் தொகை மக்கள் பணிக்காகவே செலவிடப்படும்

நீதிமன்றத் தீர்ப்புக்கமைய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவினால் தரப்படும் ஒருகோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மக்கள் பணிக்காகச் செலவிடப்போவதாக ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கின்றார். 

ஜேவிபியின் புலமைச் சொத்துக்களைக் கையாடி புத்தகமொன்றை வெளியிட்ட குற்றத்திற்காக வர்த்தக மேல் நீதிமன்றம் மனுதாரருக்கு விமல் வீரவன்ச, ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டுமென வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இத் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா, இந்தப் பணத்திலிருந்து ஒரு சதத்தைக் கூட தான் எடுக்கப்போவதில்லையெனவும் முழுப்பணத்தை மக்கள் பணிக்காகவே கட்சித்தலைமைத்துவத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் கூறினார். 

ஜே.வி.பியைப் பொறுத்தளவில் பாராளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களோ எவரும் சம்பளமோ, கொடுப்பனவுகளோ பெற்றுக்கொள்வதில்லை.

 கட்சியின் நிலைப்பாடு இது. கிடைக்கும் பணம் கட்சித்தலைமையகத்தின் மூலம் மக்கள் பணிக்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Sun, 01/13/2019 - 15:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை