97 வயது இளவரசர் பிலிப் செலுத்திய கார் விபத்து

எலிசபெத் மகாராணியின் கணவர், இளவரசர் பிலிப் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் காயம் ஏதுமின்றித் தப்பியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்ற இருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சாண்டிரிங்ஹாம பகுதிக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ரேன்ஞ் ரோவர் ரக வாகனத்தை இளவரசர் பிலிப் ஓட்டிச் சென்றதாகவும், மற்றொரு வாகனத்துடன் மோதியதில் அவரின் வாகனம் கவிழ்ந்ததாகவும் கூறப்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து 97 வயது இளவரசர் பிலிப் பதற்றம் அடைந்ததாகவும், அவரைக் காரிலிருந்து வெளியேற்ற உதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான உச்சபட்ச வயது வரம்பு இல்லை என்ற போதும் 70 வயதுக்குப் பின், வாகனம் ஓட்டுபவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை