பாவனையாளர் அதிகார சபை சுற்றிவளைப்பில் ரூ.9 1/2 கோடி அபராதம்

AMF

பாவனையாளர் அதிகார சபை ரூ. 88,822,950 தண்டப் பணத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இத்தொகை கடந்த வருடம் ஜனவரி – நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் கிடைக்கப் பெற்றவையாகுமென பாவனையாளர் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் காலப்பகுதியில் 21,188 திடீர் சுற்றிவலைப்பின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட 21,254 வழக்குகளிலிருந்து இத்தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.

இதேவேளை டிசம்பர் 01 – டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் 2254 திடீர் சுற்றிவளைப்பின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட 1265 வழக்குகளின் மூலம் ரூ. 5,780,500 தண்டப் பணமாக அறவீடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 01/08/2019 - 16:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை