திடீர் மண்சரிவு, வெள்ளத்தில் பிலிப்பைன்ஸில் 68 பேர் பலி

கிழக்கு பிலிப்பைன்ஸில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்திருப்பதோடு 18 பேர் தொடர்ந்து காணாமல்போயுள்ளனர்.

பிரதான தீவான லிசோனின் தெற்காக அமைந்திருக்கும் பிகோல் பிராந்தியத்திலேயே அதிகபட்சமாக 57 பேர் உயிரிழந்திருப்பதோடு அருகாமை பிராந்தியமான கிழக்கு விசயாஸில் மேலும் 11 பேர் பலியாகியுள்ளதாக தேசிய அனர்த்த அபாய தடுப்பு அலுவலகம் நேற்று தெரிவித்தது.

நீரில் மூழ்கியும், மண்சரிவில் சிக்கியுமே பலரும் உயிரிழந்திருப்பதோடு பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும் இன்னும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மோசமான காலநிலை காரணமாக 22,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதோடு பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், மண்சரிவு மற்றும் ஏனைய அனர்த்தங்களுக்கு காரணமான சராசரியாக 20 சூறாவளிகள் தாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை