ஐ.எஸ் தாக்குதலில் சிரியாவில் 4 அமெரிக்க படையினர் பலி

வடக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு நடத்திய தற்கொலை தாக்குதல் ஒன்றில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள மன்பிஜ் நகரில் அமெரிக்க ரோந்துப் படைக்கு அருகில் போராளி ஒருவர் வெடிகுண்டு அங்கியை வெடிக்கச் செய்ததாக ஐ.எஸ் குறிப்பிட்டுள்ளது.

இரு அமெரிக்க படையினர், பாதுகாப்பு திணைக்களத்தின் சிவில் பணியாளர் ஒருவர் மற்றும் ஒப்பந்தக்காரர் ஒருவர் என நான்கு அமெரிக்கர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க கட்டளை மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் மூன்று அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர்.

குர்திஷ் மற்றும் அரபு படைகளுக்கு அதரவாகவே மன்பிஜில் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளன. கிழக்கு சிரியாவில் இருந்து கிட்டத்தட்ட ஐ.எஸ் போராளில் அனைவரும் பின்வாங்கச் செய்யப்பட்டுள்ளனர்.

மன்பிஜ் பிரதான சந்தைக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றிலேயே கடந்த புதன்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மன்பிஜ் இராணுவ கெளஸில் உறுப்பினர்களை சந்திக்கவே அமெரிக்க துருப்புகள் இந்த உணவகத்திற்கு வந்திருப்பதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சிரியாவில் நிலைகொண்டிருக்கும் 2,000 அமெரிக்க துருப்புகளையும் வாபஸ் பெறும் அறிவிப்பு ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் வெளியிட்டதோடு, ஐ.எஸ் குழு தோற்கடிக்கப்பட்டதாகவும் பிரகடனம் செய்தார்.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை