4 வது Milo சைக்கிள் அணிவகுப்புப் போட்டி

சிறுவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மத்தியில் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்காக மேலும் 1,000 மவுண்டன் பைசிக்கிள்களை வழங்கியுள்ளது

ஆரோக்கியமான தலைமுறையைக் கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்பதில் Milo கொண்டுள்ள இலட்சியத்தின் ஒரு அங்கமாக, தாமே சொந்தமாக Milo மவுண்டன் பைசிக்கிள் சவாரியை மேற்கொள்ள வாய்ப்பளிக்கவும், Win 1,000 Mountain Bikes’ என்ற பெயரில் வர்த்தகநாமம் முன்னெடுத்த பிரச்சாரத்தின் மாபெரும் இறுதிப்போட்டியைக் கொண்டாடும் வகையிலும், மீண்டும் ஒரு முறை 1,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வாய்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட சுரண்டும் அட்டை எஸ்எம்எஸ் போட்டியின் மூலமாக போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2019 ஜனவரி 12 ஆம் திகதியன்று விளையாட்டு அமைச்சின் மைதானத்திலிருந்து சைக்கிள் அணிவகுப்பு நிகழ்வை அவர்கள் ஆரம்பித்திருந்தனர்.

அவர்கள் கொழும்பு நகர வீதிகளில் வலம் வந்து, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வருகை தந்ததுடன், அதனைத் தொடர்ந்து வெகு விமரிசையான களியாட்ட நிகழ்வுகளுடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஊக்குவிப்பது மட்டுமன்றி, சிறுவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இடையிலான பிணைப்பை வளர்ப்பதும் இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

சைக்கிள் அணிவகுப்பு நிகழ்விற்குப் புறம்பாக, 'காலை ஆகார பிரசார இயக்க' நிகழ்வொன்றும் இந்நிகழ்வில் அடங்கியிருந்தது. இதனூடாக, காலை ஆகாரத்தின் முக்கியத்துவம் மற்றும் காலை ஆகாரத்தை ஆரோக்கியமானதாகவும் மற்றும் சுவை மிக்கதாகவும் தயாரிக்கும் வழிமுறைகள் தொடர்பில் சிறுவர்களும், அவர்களது அன்னையரும் அறிந்து கொண்டனர். ஆரோக்கியமான காலை ஆகாரத்துடன் தமது தினத்தை ஆரம்பிப்போம் என்ற உறுதிமொழியையும் அவர்கள் இதன் போது எடுத்துக் கொண்டனர். பல்வேறு மைதான விளையாட்டு நிகழ்வுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், நிகழ்வுகள், இசை, உணவு மற்றும் முக்கியமாக தவற விடாது (Milo) பானத்தை அருந்தி மகிழ்வதற்கான வாய்ப்பு என பல்வேறுபட்ட விநோத நிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றன.

நெஸ்லே நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு சந்தைப்படுத்தல் முகாமையாளரான மொஹமட் அலி கூறுகையில், 'சிறந்த போஷாக்கு மற்றும் உடற்பயிற்சி நிறைந்த வாழ்க்கைமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலுவாக எடுத்துரைக்கும் ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில், Win 1,000 Mountain Bikes என்ற மிகவும் பிரபலமான எமது பிரசாரத்தை நாம் மீண்டும் ஒரு தடவை முன்னெடுத்துள்ளோம்.

உடற்பயிற்சியை விநோதமான வழியிலும் மேற்கொள்ளலாம் என்பதை சிறுவர்கள் உணரச் செய்யும் வகையில் கடந்த காலத்தைப் போலவே, மாபெரும் சைக்கிள் அணிவகுப்பு நிகழ்வொன்றுடன் இப்பிரச்சாரம் நிறைவடைந்தது. பெரும்பாலான சிறுவர்கள் மகிழ்வுடன் மேற்கொள்கின்ற ஒரு பிரபலமான விளையாட்டான சைக்கிளோட்டத்தை வருடத்தின் முற்பகுதியிலேயே தங்களது குடும்பத்தினருடன் ஒன்றுசேர்ந்து மேற்கொண்டு, ஆரோக்கியமான ஒரு வாழ்க்கைமுறையை அவர்கள் முன்னெடுப்பதற்கு நாம் அவர்களை ஊக்குவிக்க விரும்புகின்றோம். தற்போது தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் இப்போட்டிக்கு நுகர்வோர் மத்தியிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பலத்த வரவேற்பு எமக்கு உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. வர்த்தகநாமத்தின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள வலுவான நம்பிக்கை மற்றும் அபிமானம் ஆகியவற்றினை இது பிரதிபலிக்கின்றது,' என்று குறிப்பிட்டார்.

நெஸ்லே உற்பத்தியான Milo, விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்களின் செழுமை நிரம்பியதுடன், உலகில் முன்னிலை வகிக்கின்ற சொக்கிலேற் மோல்ற்று பானமாகவும் திகழ்ந்து வருகின்றது.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை