சாட்சியாள​ரை தாக்கிய வழக்கு பெப். 3 ஆம் திகதி விசாரணை

கப்பம் பெறுவதற்காக 11 பேரைக் கடத்தி காணாமற் செய்யப்பட்ட வழக்கின் பிரதான சாட்சியாளரான களகமகே லக்சிறி என்ற கடற்படை அதிகாரியை தாக்கி அவருக்கு அழுத்தம் கொடுத்தார் எனக்கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிபதி பிரியந்த லியலனே முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் மேற்படி திகதியை அறிவித்துள்ளார்.

இச் சம்பவத்தில் பிரதான சாட்சியாளராக கூறப்படும் களகமகே லக்சிறி என்ற கடற்படை அதிகாரி கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கிணங்க அதுதொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதன் அடுத்த விசரணையை மேற்கொள்வதற்கு கொழும்பு விசேட விசாரணைப்பிரிவு கோட்டை மாஜிஸ்திரேட் ரங்க திஸாநாயக்க விடுத்துள்ள உத்தரவுக்கிணங்க நேற்று கொழும்பு பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அடுத்துவரும் தினங்களில் நீதிமன்றத்திற்கு வருகை தருமாறு இதன்போது மாஜிஸ்திரேட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடற்படை இல்லத்தில் இச் சம்பவம் தொடர்பிலுள்ள சி.சி.ரி.வி. கமராவை உள்ளடக்கிய இயந்திரத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளர்களுக்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஸ)

 

 

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை