இந்தோனேசியாவில் நிலச்சரிவு: ஒன்பது பேர் பலி: 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.  

மேற்கு ஜாவாவில் உள்ள சுகபுமி மாவட்டத்தின் சர்னரேஷ்மி மலைக் கிராமத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 30 வீடுகள் புதைந்தன. 40க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையில், 8 பேரின் சடலங்களை மீட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

3 பேரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், மாயமான 38 பேரை தேடி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வீடுகளை இழந்தவர்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மழை, மின்சார துண்டிப்பு மற்றும் கடுமையான வீதிகள் காரணமாக மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான கனரக பொருட்களை எடுத்துச் செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.  

17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் மழை பருவம் காரணமாக பல இடங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இடம்பெற்று வருகின்றன.    

Wed, 01/02/2019 - 11:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை