ரஷ்ய அடுக்குமாடி இடிந்ததில் உயிரிழப்பு 37 ஆக அதிகரிப்பு

ரஷ்யாவின் மக்னிடொகோர்ஸ் நகரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 37 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் 10 பேர் காணாமல்போயிருப்பதாக மீட்பாளர்கள் ரஷ்ய ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இடிபாடுகளில் இருந்து 35 மணி நேரத்திற்கு பின் உயிராபத்து இன்றி 11 மாத ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மொஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

புத்தாண்டு விழாவில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பினாலேயே 48 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி சரிந்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

மொஸ்கோவில் இருந்து 1,695 கிலோமீற்றர் தொலைவில் உர்லா பிராந்தியத்தில் இருக்கும் இந்த நகரின் தற்போதைய வெப்பநிலை மைனஸ் 15 செல்சியஸ் என்பதோடு இரவு நேரங்களில் அது மேலும் வீழ்ச்சி அடையும்.

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை