கிழக்கு சிரியாவில் ஐ.எஸ் குழு பதில் தாக்குதல்: 32 பேர் பலி

மோசமான காலநிலையை பயன்படுத்தி குர்திஷ் தலைமையிலான படைகளுக்கு எதிராக பதில் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் குழு கிழக்கு சிரியாவில் தனது கடைசி நிலையை பாதுகாத்திருப்பதாக யுத்த கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தி இருக்கும் ஐ.எஸ் குழு தான் தாக்குதல் தொடுத்த பகுதிகளை கைப்பற்ற முடியாதபோதும் இந்த தாக்குதலில் அமெரிக்க ஆதரவு குர்திஷ் படையின் 23 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பது ஜிஹாதிக்களும் பலியாகியுள்ளனர்.

யூப்ரடிஸ் பள்ளத்தாக்கின் முன்னரங்குகளில் உள்ள குர்திஷ் படைகள் மீது தூரம் தெரியாத காலநிலையை சாதகமாக பயன்படுத்தி ஐ.எஸ் குழு பல தற்கொலை தாக்குதல்களை நடத்தி இருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவால் வான் தாக்குதல்களை நடத்த முடியாத மோசமான காலநிலையை சாதகமாகக் கொண்ட ஐ.எஸ் குழு குர்திஷ் படைகள் மீது இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த குர்திஷ் படை ஐ.எஸ் மீதான இறுதி படை நடவடிக்கையை நான்கு மாதங்களுக்கு முன் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை