ஜப்பானில் 3.1 மில்லியன்டொலருக்கு ஏலம்போன மீன்

டோக்கியோவில் 3.1 மில்லியன் டொலர் சாதனை விலைக்கு டூனா மீன் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  

சுக்கிஜி மீன் சந்தைக்குப் பதிலாக நிறுவப்பட்ட புதிய டொயோசு மீன் சந்தையில், நடத்தப்பட்ட முதல் அதிகாலை புத்தாண்டு ஏலத்தில் அந்த மீன் விற்பனை செய்யப்பட்டது. 

அரிய வகையான 278 கிலோகிராம் எடையைக் கொண்ட மீன் ஜப்பானின் வடக்கு கரையோரம் பிடிக்கப்பட்டது. இது உலகில் அழிந்து வரும் மீன் இனங்களில் ஒன்றாகும். 

பிரபல சுஷி உணவு வர்த்தகர் கியோஷி கிமுரா இந்த மீனை வாங்கியுள்ளார். தரமான மீனைத் தாம் வாங்கியதாகவும் எதிர்பார்த்ததை விட அதிக விலையில் மீனை வாங்கியதாகவும் அவர் கூறினார். 

2013 ஆம் ஆண்டு இந்த வகை மீனை வாங்குவதற்கு செலவிட்ட சாதனை தொகையாக இருந்த 1.4 மில்லியன் டொலர்களை விடவும் இது இரட்டிப்பு விலையாகும்.      

Mon, 01/07/2019 - 11:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை