அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் : நடால், ‌ஷரபோவா 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸில் ரபேல் நடால், ஷரபோவா முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சலாம் போட்டியான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் மெல்போர்னில் இன்று தொடங்கியது. உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த டக்வொர்த்தை எதிர்கொண்டார்.

இதில் நடால் 6-–4, 6-–3, 7-–5 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்று முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான கெவின் அண்டர்சன் (தென்ஆபிரிக்கா) 6–-3, 5–-7, 6-–2, 6-–1 என்ற கணக்கில் அட்ரியன் மனோரியாவை (பிரான்ஸ்) வீழ்த்தினார். டிமிட்ரோவ் (பல்கேரியா) வெர்ட்ஸ்கோவா (ஸ்பெயின்) ஆகியோர் முதல் சுற்றில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

2008 சம்பியனும், தரவரிசையில் 30-வது இடத்தில் இருப்பவருமான ரஷ்ய வீராங்கனை மரியா ‌ஷரபோவா தொடக்க சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த ஹேரியட் டார்ட்டை எதிர்கொண்டார். இதில் ‌ஷரபோவா 6-–0, 6-–0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

5-வது வரிசையில் இருப்பவரான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-–4, 6-–2 என்ற நேர்செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த டெய்லர் டவுன்சென்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் கார்சியா (பிரான்ஸ்) ஆர்யனா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

14-வது வரிசையில் இருக்கும் ஜூலியா கோஜர்ஸ் (ஜெர்மனி) முதல் சுற்றிலேயே வெளியேறினார். அவர் 6-–2, 6-–7 (5-–7), 4-–6 என்ற கணக்கில் அமெரிக்க வீராங்கனை கோலின்சிடம் வீழ்ந்தார்.

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை