வத்தளை கோவில் அருகில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

வத்தளை, ஹேகித்த வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.

இன்று (13) பிற்பகல் 3.30 மணியளவில் வத்தளை, ஹேகித்த வீதியில்  உள்ள சபரிமலை கோவிலுக்கு அருகில் கார் ஒன்றில் சென்றவர்கள் மீது, மற்றுமொரு காரில் வந்த அடையாளம் காணப்படாத சிலரால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது குறித்த காரில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதோடு, அவர்களில் இரு ஆண்கள் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளனர். காரில் பயணித்த குறித்தபெண்ணுக்குஎவ்வித காயமும் ஏற்படவில்லை என ருவன் குணசேகர தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், வத்தளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Sun, 01/13/2019 - 16:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை