படைப்புழு பாதிப்பு; நஷ்டஈடாக ரூ.250 மில்லியன் ஒதுக்கீடு

Rizwan Segu Mohideen
படைப்புழு பாதிப்பு; நஷ்டஈடாக ரூ.250 மில்லியன் ஒதுக்கீடு-Cabinet Allocated Rs 250 million for Army Worm Effect Compensation

படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக ரூபா 250 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (22) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக சமூக வலுவூட்டல் அமைச்சர்  தயா கமகே தெரிவித்தார்.

படைப்புழுவை கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களின் தாக்கம் தொடர்பில் ஆராயவிருப்பதாக விவசாய மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்திருந்தார்.

இந்த இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்தும் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்திய பின்னர் அறுவடை செய்யப்படும் உணவுப் பொருட்களினால் மக்களுக்கு ஏதும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அநுராதபுரம் கமநல சேவை அலுவலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

Wed, 01/23/2019 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை