கென்ய ஹோட்டல் தாக்குதல்: உயிரிழப்பு 21 ஆக அதிகரிப்பு

நைரோபியிலுள்ள ஹோட்டல் வளாகத்தில் சோமாலிய ஆயுதக் குழு நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 21ஆக அதிகரித்துள்ளதை கென்ய அரசு உறுதி செய்துள்ளது.

செவ்வாய்கிழமையன்று டஸ்ட்டி2 ஹோட்டல் மற்றும் வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ரத்தக்கறையோடு வெளியேற்றப்பட்டனர்.

காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19 பேரை இன்னும் காணவில்லை என்று கென்ய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக சோமாலியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட அல் ஷபாப் கூறியது.

ஹோட்டலில் ஆயுததாரிகளின் முற்றுகையை முறியடிக்க 19 மணி நேரம் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை