கொலம்பியாவில் கார் குண்டு தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு

கொலம்பிய தலைநகரான பொகோடாவில் உள்ள பொலிஸ் அகடமி அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.

கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 54 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். ஜெனரல் சன்டென்டர் பொலிஸ் கல்லுௗரியை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கல்லுௗரியின் சுவரில் மோதி வெடிக்க வைக்கப்பட்ட நிலையில் அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பயிலுனர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் வெடிகுண்டு தாக்குதலில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெலிகொப்டர்கள் மூலம் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பல ஆண்டுகளாக கொலம்பியாவில் இடதுசாரி புரட்சியாளர்களால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். படையினரை இலக்கு வைத்தே பெரும்பாலான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை