2018இல் நாடு முழுவதும் 51,448 டெங்கு நோயாளர்கள்

கொழும்பில் 10,261; யாழ். மாவட்டத்தில் 4,058 பேர்

2018 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்களை கொண்ட மாவட்டமாக யாழ். மாவட்டம் காணப்படுகிறது என சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

யாழ் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு 4,058 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் கடந்த ஆண்டு 51,448 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பில் 10,261 நோயாளர்களும்,

கம்பஹாவில் 5,836 பேரும், மட்டக்களப்பில் 4,843 பேரும் யாழ்ப்பாணத்தில் 4,058 பேரும், கண்டியில் 3,828 பேரும் களுத்துறையில் 3,103 பேருமென அதிக டெங்கு நோயாளர்கள் கொண்ட மாவட்டங்களாக காணப்படுகின்றன. 

வடக்கில் ஏனைய மாவட்டங்களான வவுனியாவில் 597 பேரும், கிளிநொச்சியில் 342 பேரும், மன்னார் மாவட்டத்தில் 223 பேரும் முல்லைத்தீவில் 113 பேரும் கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.  

(கிளிநொச்சி குறூப் நிருபர்)  

Mon, 01/14/2019 - 08:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை