1st Test: SLvAUS; இலங்கை 144 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது

Rizwan Segu Mohideen
1st Test: SLvAUS; இலங்கை 144 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது-1st Test-AUSvSL-SL All Out for 144

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையில் பிரிஸ்பனில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தனது முதலாவது இனிங்ஸிற்காக  சகல விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பகலிரவு போட்டியாக இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன 24 ஓட்டங்களுடனும் லஹிரு திரிமான்ன 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்ததோடு, அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரான நிரோஷன் திக்வெல்ல சிறப்பாக துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அந்த வகையில் இன்னிங்ஸின் நிறைவில் இலங்கை அணி 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள், இலங்கை அணி வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தனர்.

அந்த வகையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களான பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஜெய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும் மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் நதன் லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தற்போது தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, சற்று முன்னர் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இலங்கை 144/10 (56.4)
நிரோஷன் திக்வெல்ல 64 (78)
திமுத் கருணாரத்ன 24 (70)
குசல் மெண்டிஸ் 14 (44)
லஹிரு திரிமான்ன 12 (30)
தினேஷ் சந்திமால் 05 (07) (அ.த.)

பெட் கம்மின்ஸ் 4/39 (14.4)
ஜெய் ரிச்சர்ட்சன் 3/26 (14)
மிச்சல் ஸ்டார்க் 2/41 (12)
நதன் லயன் 1/38 (16)

அவுஸ்திரேலியா 72/2* (23)
மார்கஸ் ஹரிஸ் 40* (76)

Thu, 01/24/2019 - 15:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை