1st ODI: SLvNZ; இலங்கைக்கு 372 ஓட்ட வெற்றி இலக்கு

Rizwan Segu Mohideen
1st ODI: SLvNZ; இலங்கைக்கு 372 ஓட்ட வெற்றி இலக்கு-1st-ODI-SLvNZ-NZ-371-James-Neesham-Guptill

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 371 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பகலிரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்டில் பதினான்காவது ஒருநாள் சதத்தை கடந்து நியூசிலாந்து அணிக்காக 139 பந்துகளில் 138 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன் கேன் வில்லியம்சன் 76 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததோடு ஜேம்ஸ் நீசம் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதில் ஆறு 6 ஓட்டங்கள் உள்ளடங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க, நுவன் பிரதீப், திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அந்த வகையில் 50 ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்களை பெற்றதற்கு அமைவாக, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து 371/7 (50)
மார்ட்டின் கப்டில் 138 (139)
கேன் வில்லியம்சன் 76 (74)
ரோஸ் டெய்லர் 54 (37)
ஜேம்ஸ் நீசம் 47* (13)

நுவன் பிரதீப் 2/72 (10)
லசித் மாலிங்க 2/78 (10)
திசர பெரேரா 2/80 (10)

Thu, 01/03/2019 - 10:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை