ரூ. 1,950 மில். முதலீட்டில் துரித அபிவிருத்தி

பலாலி விமான நிலையத்தை 1,950 மில்லியன் ரூபா முதலீட்டுடன் துரிதமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சுற்றுலா தொழிற்துறையின் மேம்பாட்டுக்கான விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய நேர அட்டவணைக்கு ஏற்ப சர்வதேச வர்த்தக பயணிகள் விமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தவும் பலாலி விமான நிலையத்துக்கு தேவையான அபிவிருத்தி பணிகளை 1,950 மில்லியன் ரூபா முதலீட்டுடன் இலங்கை விமானப் படையின் மூலம் துரிதமாக மேற்கொள்வதற்கும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை