16 வயதில் சச்சின் சாதனையை முறியடித்த நேபாள அணி வீரர்

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நேபாளம் 145ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் நேபாளம் சார்பில் களம் இறக்கப்பட்ட 16வயது இளம் வீரர் ரோஹித் மெளடெல் முதலாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். 

சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆவார். தற்போது அவரது சாதனையை ரோஹித் முறியடித்துள்ளார். 

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 50ஓவர்களில் 9விக்கெட் இழப்புக்கு 242ஓட்டங்கள் எடுத்தது. 

அந்த அணியின் சார்பில் விளையாடிய ரோஹித் பெளடெல் 58பந்துகளில் 55ஓட்டங்கள் எடுத்தார். 

பின்னர் விளையாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 19.3ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97ஓட்டங்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. 

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் (16 ஆண்டுகள் 213 நாள்கள்) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியபோது அரை சதம் அடித்திருந்தார். எனினும் நேபாளத்தின் ரோஹித் பெளடெல் 16 வயதில் (16 ஆண்டுகள் 146 நாள்கள்) இந்த சாதனையை முறியடித்துள்ளார்.    

Mon, 01/28/2019 - 14:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை