கச்சதீவு திருவிழா மார்ச் 15இல்

வரலாற்று புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவில் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் பெருமளவானோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் இன்று (22) மதியம் 2 மணியளவில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பெருவிழா நடைபெறவுள்ளதால், இந்திய – இலங்கை பக்தர்கள் கலந்துகொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில், கச்சதீவு ஆலய பங்குத்தந்தை உட்பட நெடுந்தீவு பிரதேச செயலாளர், கச்சதீவு போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள், முப்படையினர், பொலிஸ் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ் குறூப் நிருபர்

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை