அரசாங்க வைத்தியசாலைகளுக்கு132 அம்பியூலன்ஸ்கள் இன்று கையளிப்பு

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு132 அம்பியூலன்ஸ்கள் இன்று கையளிப்பு-132 Ambulance Handing over

2,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நாடு முழுவதுமுள்ள 132வைத்தியசாலைகளுக்கு தேவையான 132 அம்பியூலன்ஸ் வண்டிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் கொழும்பு மாநகரசபையில் இன்று (18) பிற்பகல் 2மணிக்கு நடைபெறும்.

இங்கிலாந்தின் 'ஃபோர்ட்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அம்பியூலன்ஸ் வண்டிகளுக்காக அரசாங்கம் 2,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதுபோன்ற 250 அம்பியூலன்ஸ் வண்டிகளை வைத்தியசாலைக்கு பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு132 அம்பியூலன்ஸ்கள் இன்று கையளிப்பு-132 Ambulance Handing over

அம்பியுலன்ஸ் வண்டிகளில் 103மாகாணசபை வைத்தியசாலைகளுக்கும் 27மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும் 02ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்தியசாலைகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.  

மேலும் ஜேர்மனியின் 'பென்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 100 அம்பியூலன்ஸ் வண்டிகளும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. ஏற்கனவே 40 பென்ஸ் வகை அம்பியூலன்ஸ் வண்டிகள் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/18/2019 - 12:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை