லெவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் 12வது வருடாந்த கூட்டம்

லெவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் 12வது வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த 03.01.2019 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு அல்- ஹுசைன் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

கழகத்தின் பதில் செயலாளர் இலியாஸ் அஸிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நடப்பாண்டுக்கான புதிய உச்சபீட உறுப்பினர்களாக கழகத்தின் தலைவராக ஏ.எம். ஹபில், செயலாளராக எஸ்.எம். நசீர், பொருளாளராக ஏ.ஆர்.எம். நஜா, உப தலைவராக யூ.கே.எம். முபின், உப செயலாளராக எம்.ஏ.எம். அஸ்மி, உப பொருளாளராக ஏ.வி.எம். றிஸ்வி, தவிசாளராக இலியாஸ் அஸிஸ், முகாமையாளராக ஏ.எல்.எம். நியாஸ், உதவி முகாமையாளராக எப். ஜிப்ரி ஊடக இணைப்பாளராக யூ கே. காலித்தீன் ஆகியோரும் நிர்வாக உறுப்பினர்களாக எம்.ஐ.எம். இம்தாத், ஏ.எல்.எம். ரினாஸ், ஏ.ஆர்.எம். ரியாஸ், ஏ. வி.எம். ரியாஸ், ஏ.வி.எம். ஜஹான், ஏ.ஜி.எம். சாஜித், எம்.ரி.எம். ஆசிப் இலாஹி, ஐ.எல்.எம். வஸீம், எம்.ஆர்.எம். நாசீக், எம்.என்.எம்.ஜே. இஸ்க்கி, ஏ.எம்.எம். ரிப்னாஸ் மற்றும் ஏ.ஜி.எக். அப்றத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கழக அணித்தலைவராக இளம் வீரர் அப்லால் காரியப்பரும் உதவித் தலைவராக சல்பி ஜமானும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதியாக கழகத்தின் கடந்த ஆண்டின் அதிசிறந்த முறையிலே விளையாட்டில் திறமையை வெளிக்காட்டிய வீரர்களுக்கும், மற்றும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கழகத்துக்காக நிதிப்பங்களிப்பை வழங்கிய கழக உறுப்பினர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை