“Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி

நவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி எதிர்வரும 16 ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொது மக்களுக்காக இலவசமாக நடாத்தப்படும். உணவு, பழவகைகள், மரக்கறி வகைகள் விற்பனைப் பிரிவுகளையும் கண்காட்சி உள்ளடக்கியுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு விவசாயத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளன. விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் நவீன விவசாய தொழில்நுட்ப முறைமையை இலங்கை விவசாய சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதும் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வியை ஏற்படுத்துவதும் இக்கண்காட்சியின் நோக்கமாகும். கண்காட்சியைப் பார்வையிட்ட ஜனாதிபதி, பணிக்குழாமினருடன் சுமுகமாக கலந்துரையாடினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க மற்றும் விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை