வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு விசேட ஆணைக்குழு நியமனம்

மகேஸ்வரன் பிரசாத்

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக விசேட அபிவிருத்தி ஆணைக்குழுவொன்றை பிரதமர் நியமிக்கவிருப்பதாக பாராளுமன்றத்தில் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு விசேட அபிவிருத்தி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனையொன்றை பிரதமர் முன்வைத்துள்ளார். இதனூடாக வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

2019ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை, வாழ்வாதார முன்னேற்றம் போன்ற விடயங்களுக்குத் தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்.

விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய தேவை உள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

Sat, 12/22/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை