புஷ்பராஜ், அமரா, பாரமிக்கு வீடமைப்பு அமைச்சினால் நிதியுதவி, வீடுகள் கையளிப்பு

இவ்வருடம் தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்த தேசிய உடற்கட்டழகர் லூசன் புஷ்பராஜ்,பராமெய்ல்லுனர் வீராங்கனைஅமரா இந்துமதிமற்றும் இளம் மெய்வல்லுனர் வீராங்கனை பாரமி வசந்திமாரிஸ்டெல்லாஆகிய வீரர்களுக்கு வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிதியுதவியும்,வீடுகளும் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டன.

தாய்லாந்தில் இம்மாதம் நடைபெற்ற உலக உடற்கட்டழகன் மற்றும் உடல்வாகு விளையாட்டு வல்லவர் போட்டியில் 100 கிலோகிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் சம்பியன் பட்டத்தைவென்ற லூசன் புஷ்பராஜுக்குவீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சர் சஜித் பிரேமதாச தனது சொந்த நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாபணப்பரிசைவழங்கிவைத்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் வீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சராககடந்தவியாழக்கிழமை (20) தனதுஅமைச்சில் வைத்து பொறுப்புக்களை கடமையேற்றகையோடு லூசன் புஷ்பராஜுக்கு இந்த நிதியினை வழங்கினார்.

எனினும்,கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்று ஐரோப்பியமட்டத்தில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தவீரராகவரலாற்றில் இடம்பிடித்த லூசனுக்கு,அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் மொறட்டுவையில் உள்ள சயுருபுர தொடர் மாடிகுடியிருப்பில் நிர்மானிக்கப்பட்டுள்ள 30 இலட்சம் ரூபாபெறுமதியானவீடொன்றினையும் வழங்கியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து,பராமெய்வல்லுனரில் தேசியமற்றும் சர்வதேசவெற்றிகளைப் பெற்றுக்கொண்டஅமரா இந்துமதிக்குமொறட்டுவையில் உள்ளசயுருபுரதொடர்மாடிகுடியிருப்பில் நிர்மானிக்கப்பட்டுள்ள 30 இலட்சம் ரூபா பெறுமதியான வீடொன்று கடந்த 25ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் கையளிக்கப்பட்டது. இதன்போதுஅமரா இந்துமதியின் குடும்பத்தினரும் வருகைதந்திருந்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 3 ஆவது ஆசிய பரா விளையாட்டுபோட்டிகளில் பெண்களுக்கான 45,46,47 பிரிவுநீளம் பாய்தலில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திரமாற்றுத்திறனாளிவீராங்கனைகளில் ஒருவரான அமரா இந்து மதி,வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

முன்னதாக 2014 ஆம் ஆண்டு தென்கொரியாவின் இன்சியோனில் நடைபெற்ற ஆசியபராவிளையாட்டு விழாவில் 2 வெள்ளிப் பதக்கங்களைஅமரா இந்துமதி வென்றிருந்தமை மற்றுமொருசிறப்பம்சமாகும்.

இதேவேளை,ஆர்ஜென்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் கடந்தஒக்டோபர் மாதம் நடைபெற்ற 3ஆவது கோடைகால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்குபெருமையைத் தேடிக் கொடுத்த இளம் வீராங்கனை பாரமி வசந்தி ஸ்டெல்லாவுக்கு,கொழும்பில் வந்து தங்கியிருந்து பயிற்சிகளைமேற்கொள்வதற்காக மொறட்டுவையில் உள்ள சயுருபுர தொடர்மாடி குடியிருப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றை வழங்குவதற்கு வீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சர் சஜித் பிரேமதாசநேற்றுமுன்தினம் (26)நடவடிக்கைஎடுத்தார்.

புத்தளம் மாவட்டம் –சிலாபத்தில் உள்ளமிகவும் பின்தங்கியமீனவக் கிராமமான அம்பகந்த விலசரப்பு தோட்டத்தில் வசித்து வருகின்ற 17 வயதான பாரமி வசந்தி மாரிஸ்டெல்லாவின் தந்தை மீன்பிடித் தொழில் செய்துவருகின்றார். மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தனதுசொந்த வீட்டை அடகுவைத்து மகளை சர்வதேச போட்டிகளில் பங்குபெறச் செய்துஅனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.

இதன் பிரதிபலனாக, யாருடைய உதவியும் இல்லாமல் மிகவும் குறுகிய காலத்தில் மெய்வல்லுனர் அரங்கில் இலங்கைக்குபெருமையைதேடிக் கொடுத்த பாரமியின் வேண்டுகோளுக்கு இணங்க,மிகவும் மோசமானநிலையில் இருந்தஅவரது வீட்டை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கமைய செவன நிதியத்திலிருந்து சுமார் 10 இலட்சம் ரூபாசெலவில் புனரமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொழும்புக்கு வந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்காகமொறட்வையில் உள்ளதொடர்மாடிகுடியிருப்பில் வீடொன்றும் பாரமிக்குவழங்கப்பட்டது.

மிகவும் கஷ்டத்துக்குமத்தியில் தேசிய மற்றும் சர்வதேசமட்டப் போட்டிகளில் பங்குபற்றி இலங்கைக்குபெருமையைதேடிக் கொடுக்கின்றசகலவீரர்களுக்கும் இன,மதமொழிவேறு பாடின்றி வீடமைப்புமற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் உதவிகள் செய்துகொடுக்கப்படும் எனஅமைச்சர் சஜித் பிரேமதாசதெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து நாட்டிலுள்ள திறமையான வீரர்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தைமிகவிரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த இரு வீராங்கனைகளுக்கும் மொறட்டுவையில் உள்ள சயுருபுர தொடர்மாடி குடியிருப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் கையளிக்கப்பட்டன. இது வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் விளையாட்டு வீரர்களுக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் கையளிக்கப்பட்ட 22ஆவது, 23ஆவது வீடுகள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பீ.எப் மொஹமட்

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை