ஒரு டொலர் லஞ்சத்திற்கு சிங்கப்பூரில் வழக்கு பதிவு

வெறும் ஒரு டொலர் லஞ்சம் பெற்றதற்கு சீன புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சிங்கப்பூரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போர்க் லிப்ட் டிரக் ஓட்டுநர்களான இந்த தொழிலாளர்கள் சரக்கு பொருட்களை தாமதிக்காமல் இறக்குவதற்கு பல தடவைகள் ஒரு டொலர் வீதம் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் 47 வயது சென் சிலிங் மற்றும் 43 வயது சோ யுகும் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு சிறை மற்றும் 100,000 சிங்கப்பூர் டொலர்கள் அபராதத்திற்கு முகம்கொடுப்பார்கள்.

சிங்கபூர் உலகில் ஊழல் குறைந்த நாடு என்று பெயர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலஞ்சம் எத்தனை தொகையாக இருந்தாலும் எந்த வகையாக இருந்தாலும் அது தொடர்பில் சகிப்புக் காண்பிக்கப்பட மாட்டாது என்று சிங்கப்பூர் ஊழல் நடைமுறை விசாரணை சபை குறிப்பிட்டுள்ளது.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை