ஹுவாவியின் மெங்கிற்கு கனடா நீதிமன்றில் பிணை

கனடாவில் கைதுசெய்யப்பட்ட ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாகப் பதிவான குற்றச்சாட்டுகள் தொடர்பில், மெங் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் சாத்தியம் இருந்த நிலையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட மெங் 10 மில்லியன் பிணையில் வன்கூவர் நீதமன்றத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் 24 மணி நேர கண்காணிப்பில் இருப்பார் என்றும் இலத்திரன் பட்டியை அணியவும் நிதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

இரவு 11 மணி தொடக்கம் காலை 6 மணி வரை வீட்டில் இருக்க அவருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதோடு அனைத்து கடவுச் சீட்டுகள் மற்றும் பயண ஆவணங்களையும் கையளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கைது கனடா மற்றும் அமெரிக்கா உடனான சீனாவின் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை