இலங்கை அணி துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜொனதன் லூவிஸ்

Rizwan Segu Mohideen
இலங்கை அணி துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜொனதன் லூவிஸ்-Jonathan Lewis Appointed as SL Batting Coach

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொனதன் லூவிஸ் (Jonathan Lewis) நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலையைில் (2019) இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின்  பிரதான நிர்வாகி அஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

43 வயதான ஜொனதன் லூவிஸ் இந்நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னர், இங்கிலாந்து பிராந்திய அணியான டர்ஹம் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொனதன் லூவிஸ், இங்கிலாந்து அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக 64 வயதான அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ரிக்ஸன்  கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இரு பயிற்றுவிப்பாளர்களும் இணைந்து, இம்மாத இறுதியில் நியூசிலாந்தில் ஆரம்பமாகும், நியூசிலாந்து அணியுடனான இரு டெஸ்ட், 3 ஒருநாள், ஒரு ரி20 போட்டிகளுக்கு பயிற்சியாளர்களாக செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை அணி அண்மையில் இலங்கை இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் உரிய முறையில் பிரகாசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பந்துவீச்சு பயிற்சியாளரான நுவன் சொய்சா, போட்டியை நிர்ணய குற்றச்சாட்டு மற்றும் விதி மீறல் தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதமளவில், சர்வதேச கிரிக்கட் சபையினால் இடைநிறுத்தப்பட்டார்.

அத்துடன் போட்டி நிர்ணயம் மற்றும் தகவல்களை மறைத்ததாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Thu, 12/13/2018 - 15:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை