இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்தது.

தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக ஆடி வரும் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 20 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றத்தை எதிர் கொண்டுள்ளது.

நேற்றைய 3ஆம் நாள் தேநீர் இடைவேளையின் பின்னர் சகல விக்கெட்டுகளையும் இழந்த நியுசிலாந்து அணியின் முதலாவது

இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது. நியுசிலாந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 578 ஓட்டங்களைக்குவித்தது. அபாரமாக ஆடிய டொம் லேதம் ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் தலா 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும் தில்ருவன் பெரேரா மற்றும் டி சில்வா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 282 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ 83 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்களையும் பெற்றதுடன் நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் பெற்றார்.

 

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை