மதுபானசாலையை அகற்றுமாறு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உளள சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள் இணைந்து இன்று (27) கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றுக காலை9.30மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,பாடசாலைக்கு அருகில் மதுபானசாலையா,வியாபார உரிமம் இல்லாது இயங்கலாமா மதுபானக்கடை,வேணாம் வேணாம் மதுக்கடை வேண்டாம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,இப்பகுதியில் மதுபானக்கடை இருப்பதனால்,பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று கல்விகற்க்க முடியவில்லை. மதுபானசாலையில் மதுவாங்கிக் கொண்டு வந்து அந்தப் பகுதியில் வைத்து அருந்துவதுடன்வீதியால் செல்பவர்களுக்கு அவர்கள் இடையூறு விளைவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

அதேவேளை,இந்த மதுபானசாலை சிவன் கோவிலுக்கு அருகாமையில் இருப்பதனால்இந்த மதுபானசாலையை அகற்றக் கோரி பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் உயர் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் இருப்பதனால் மேலதிகமான வழக்குகளைப் பதிவு செய்ய முடியாதுள்ளதாக பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மதுபான சாலை தொடர்பிலான கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

அப்போது,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த மதுபானசாலையை அகற்ற முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மதுபானசாலையை அகற்ற முடியாதவாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தடையாக இருப்பதாகவும் ஆர்பாட்டக்கார்ர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இந்த மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறியிடம் மகஜர் கையளித்ததுடன்,தமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும்,இந்த மதுபானசாலையை தடை செய்யாவிடின் தொடர்ந்தும்  எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Thu, 12/27/2018 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை